இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் – அவசரநிலை அறிவிப்பு

SaiSai
Feb 28, 2026 - 15:25
 0  52
இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் – அவசரநிலை அறிவிப்பு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் நகரின் மத்திய பகுதியில் மூன்று பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக Fars News Agency செய்தி வெளியிட்டுள்ளது. பல ஏவுகணைகள் தலைநகரைத் தாக்கியிருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தலைநகரின் சில பகுதிகளில் அடர்ந்த புகை எழுந்ததாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி அவர்களின் அலுவலகத்திற்கு அருகே தாக்குதல் இடம்பெற்றதாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலை அறிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Israel Defense Forces வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன. குடிமக்கள் தங்குமிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வான்வெளி தற்காலிகமாக சிவில் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதாகவும், கல்வி மற்றும் அத்தியாவசியமற்ற பொதுக்கூட்டங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow