யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற பெண் உயிரிழப்பு_*..!
யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற பெண் உயிரிழப்பு_*..!
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே, யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் மேற்கொள்ள முயன்ற 32 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் ஒரு குழந்தை பிறந்திருந்த நிலையில், இரண்டாவது குழந்தையை வீட்டிலேயே இயற்கை முறையில் பெற்றெடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரசவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடுமையான உடல்நலச் சிக்கலால் அவர் உயிரிழந்துள்ளார். எனினும், பிறந்த குழந்தை நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் தகுதியான மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
What's Your Reaction?



