புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் 15வது மைல் கல் (கனுவா) பகுதிக்கு அருகில், இன்று (12) காலை சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்
இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,
அவற்றில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக முந்தலம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை,
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை,
சேத விபரங்கள் உள்ளிட்ட முழுமையான உத்தியோகபூர்வ தகவல்கள்
பொலிஸாரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது அறிவிக்கப்படும்
What's Your Reaction?



