USA அணிக்கான வலைப்பந்து வீச்சாளராக தெரிவான மலையக வீரர் ரவிகுமார் அபிஷேக்

SaiSai
Jan 12, 2026 - 12:05
Jan 12, 2026 - 12:14
 0  29
USA அணிக்கான வலைப்பந்து வீச்சாளராக தெரிவான மலையக  வீரர் ரவிகுமார் அபிஷேக்

USA அணிக்கான வலைப்பந்து வீச்சாளராக தெரிவான பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழக வீரர் ரவிகுமார் அபிஷேக்

பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலதுறை ஆட்ட வீரர் ரவிகுமார் அபிஷேக், அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் நெட் பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நுவரெலியா மாவட்டத்தின் கழகங்களில் ஒன்றான பொஸ்கோனியன்ஸ் கழகத்தில் விளையாடி வரும் அபிஷேக், பல்வேறு மட்டங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்க தேசிய அணிக்கான பயிற்சிகளுக்கான வலைப்பந்து வீச்சாளர்களில் ஓருவராக அபிஷேக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் மாணவரும் மற்றும் வட்டளை தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின் போது அபிஷேக் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

வட்டவளை பகுதியைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இளம் வீரர் ரவிகுமார் அபிஷேக் இவ்வாறு வலைப் பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டமை அவரது தனிப்பட்ட திறமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகவும், பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியின் விளையாட்டு வளர்ச்சிக்கு கிடைத்த பெருமையாகவும் கருதப்படுகிறது.

மேலும், இந்தத் தெரிவு வட்டவளைப் பகுதியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

#winmedia #SLCricket #uscricket #SportsNews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow