வீட்டில் போலி அமெரிக்க டொலர் அச்சிட்ட நபர் ஒருவர் கைது!

SaiSai
மே 18, 2026 - 13:07
 0  4
வீட்டில் போலி அமெரிக்க டொலர் அச்சிட்ட நபர் ஒருவர் கைது!

வீட்டில் நவீன அச்சு இயந்திரம் வைத்துஅமெரிக்க டொலர் அச்சிட்டு வந்த நபர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுஅச்சடிக்கப்பட்ட 624 போலி அமெரிக்க டொலர் நோட்டுக்களும் மீட்பு_

எண்டேரமுல்ல பகுதியில் போலி அமெரிக்க டொலர் மற்றும் ரூபா நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை:

சந்தேக நபரிடமிருந்து பெருமளவிலான போலி நோட்டுகளும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

624 போலி அமெரிக்க டொலர் நோட்டுகள்.251 போலி 5,000 ரூபா நோட்டுகள்.

போலி நோட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட நவீன அச்சு இயந்திரம் (Printer).

வர்ணம் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள்.

சந்தேக நபரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 1,100 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எண்டேரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவர் நீண்டகாலமாக இந்தப் போலி நோட்டு அச்சிடும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா? இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா? 

என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow