மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு; உயிர்ச்சேதங்கள் இல்லை
மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு; உயிர்ச்சேதங்கள் இல்லை
மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் இன்று (10) அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவால் உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் பல இடங்களில் மண் மேடுகள் இடிந்து விழுந்துள்ளதால், குறித்த வீதியில் பயணம் செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?



