ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை ஒரு மாதத்தில் நிறைவு – மார்சில் வழக்குத் தாக்கல்

SaiSai
Jan 28, 2026 - 20:47
 0  31
ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை ஒரு மாதத்தில் நிறைவு – மார்சில் வழக்குத் தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்றும், அதன் பின்னர் மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தமது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட போது அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow