80 இலட்சம் பெறுமதியான கார் திருட்டு - சந்தேகநபர் கைது!

SaiSai
Jan 29, 2026 - 12:24
 0  30
80 இலட்சம் பெறுமதியான கார் திருட்டு - சந்தேகநபர் கைது!

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த ரூ.80 இலட்சம் பெறுமதியான கார் ஒன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், நேற்று (28) அதிகாலை கெஸ்பேவ பிரதேசத்தில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, 06 கிராம் 235 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் குறித்த காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யட்டகல, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளில், எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் இரண்டு முச்சக்கரவண்டிகளையும், ஹோமாகம பொலிஸ் பிரிவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் திருடிய சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

???? முச்சக்கரவண்டி கொள்ளை: மேலும் 4 பேர் கைது

இதேவேளை, கடந்த 2025.12.12ஆம் திகதி பிலியந்தல பொலிஸ் பிரிவில் ரூ.14 இலட்சம் பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால், நேற்று முற்பகல் இரத்மலானை பிரதேசத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 முதல் 28 வயதுக்கிடைப்பட்ட இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow