இந்தியா: ஈரோட்டில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பில் பெண்களுக்கு தனி இடம்
இந்தியா: ஈரோட்டில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பில் பெண்களுக்கு தனி இடம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோட்டில், வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை கருத்தில் கொண்டு, நிகழ்வு நடைபெறும் மைதானத்தின் முன்பகுதியில் பெண்கள் தனியாக நின்று பங்கேற்கும் வகையில் நான்கு (4) தனித்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
பெரும் மக்கள் திரளுடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுவதுடன், அரசியல் நிகழ்வுகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த புதிய அணுகுமுறையாகவும் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?



