நெஞ்சை கரைய செய்யும் -நெகிழ வைத்த நிகழ்வு

SaiSai
Dec 9, 2025 - 14:04
 0  45
நெஞ்சை கரைய செய்யும் -நெகிழ வைத்த நிகழ்வு

மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில்!

வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாகக் கூறப்படுகின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீட்பு பணியில் ஈடுபட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Sampath Abeywickrama தனது முகநூல் பதிவில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவில், “வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல பகுதி முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் ஒரு பிரதேசமாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அதே இடத்தில் புதைக்கப்படும் அளவுக்குக் குரூரமான சம்பவம் நடந்தது.

“அந்த ஒவ்வொரு உடலையும் என் இரு கைகளாலும் தூக்க வேண்டிய அளவுக்கு நான் துர்ப்பாக்கியமானவனாக இருந்தேன். சிறிய மகன் எழுதிய ஒரு பென்சில் உடலின் அருகே கிடந்ததைக் கண்டேன்.

“மிகவும் மனவேதனையடைந்து அதை உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டேன். அந்தப் பென்சிலை என்னிடமே வைத்துக்கொண்டு, உடலை ஒப்படைத்தேன்” என வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Sampath Abeywickrama வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow