பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கெமரா!
பெண்கள் ஆடை மாற்றும் முறையில் கேமரா கையும் மெய்யுமாக மாட்டிய கடை உரிமையாளர்
பெண்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.
இத் தகவலை உடனடியாக அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.
ஆடை மாற்றிப் பார்க்கும் (ஃபிட்டோன்) அறையில் கேமரா ஒன்றை மறைத்து வைத்து, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளியாகப் பதிவு செய்த கடை ஒன்றின் உரிமையாளர் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தலவத்துகொட நகரில் உள்ள தைக்கப்பட்ட ஆடை வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்து அவரது தொலைபேசியை சோதனையிட்டபோது,
குறித்த அறையில் பதிவாகிய 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளிகளில் வயோதிபப் பெண்கள்,
இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது உள்ளாடைகளை மாற்றுவதும்,
வீட்டில் ஒரு பெண் குளியலறையில் குளிக்கும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரால் பெறப்பட்ட காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதா?
அல்லது இந்த நாட்டில் அல்லது வெளிநாடுகளில் உள்ள வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டதா?
என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக கேமரா மற்றும் தொலைபேசி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?



