11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதாக சந்தேகம்!
11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதாக சந்தேகம்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உட்கொண்ட 11 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) வியாழக்கிழமை மாலை, தனது வீட்டிற்கு முன்னால் உள்ள நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதன் காரணமாகவே சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



