நுவரெலியாவில் பேருந்து மோதி பாதசாரி பலி!

SaiSai
Aug 23, 2026 - 22:24
Aug 24, 2026 - 07:44
 0  51
நுவரெலியாவில் பேருந்து மோதி பாதசாரி பலி!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் பலியாகியுள்ளார்.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, தடையாளி திடீரென இயங்காமல் போனதால், வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow