உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று

SaiSai
Sep 22, 2026 - 08:20
 0  29
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று

கொழும்பு, செப். 22 –

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.

சதித்திட்டம் தீட்டியமை, தாக்குதல்களுக்கு உதவி மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் முன்னிலையில் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக இடம்பெற்ற இந்த வழக்கில் அரச தரப்பு சார்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், வழக்கின் சாட்சிப் பதிவுகள் மற்றும் இருதரப்பு சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ளன.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுவதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow