22வது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சங்கம் மனு

SaiSai
Aug 18, 2026 - 14:51
 0  54
22வது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சங்கம் மனு

22வது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சங்கம் மனு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், 22வது திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow