ஹட்டன் -கொழும்பு வீதியில் விபத்து!

SaiSai
Dec 25, 2025 - 13:12
Dec 25, 2025 - 13:13
 0  23
ஹட்டன் -கொழும்பு வீதியில் விபத்து!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவல பகுதியில் சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று (24) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த லொறி, வீதியில் உள்ள பாரிய வளைவொன்றில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத நிலையில், லொறிக்கும் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட சிமெந்து மூட்டைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow