உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அதிகாரிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

SaiSai
Sep 15, 2026 - 12:37
 0  49
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அதிகாரிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அதிகாரிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது, தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறை மாஅதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த அடிப்படை உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்பட்டு, குறித்த இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன், பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதி காவல்துறை மாஅதிபர் பாலித சிறிவர்தன ஆகிய மூவரும் இந்த அடிப்படை உரிமை மீறலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow