பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம்!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்
அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி, இன்று (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தமது சம்மேளனம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
What's Your Reaction?



