இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

SaiSai
Mar 1, 2026 - 15:58
 0  44
இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

தாக்குதல்களின் போது, ​​இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

"பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது" என்று இரானிய ராணுவம் கூறியது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், "அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'உண்மையான வாக்குறுதி 4' நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளை குறிவைக்கிறோம்" என்று கூறியது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைன் ஆகும்.

கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமும் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும்.

துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் ஒரு அதிகாரப்பூர்வ அமெரிக்க இராணுவத் தளம் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் முக்கிய அமெரிக்க கடற்படைத் துறைமுகமாகும்.

இராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது இருப்பைப் பேணுகிறது.

வடக்கு இராக்கில் உள்ள எர்பில் விமானத் தளமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கிய அமெரிக்க தளமாகும்.

சௌதி அரேபியாவில், 2,300க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் சௌதி அரசாங்கத்துடன் இணைந்து வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகின்றன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாகும்.

ஜோர்டானில் உள்ள முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளம் லெவண்ட் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க விமானப்படை மையத்தின் 332வது விமானப் பயணப் பிரிவுக்கு முக்கியமானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow