கொந்தளித்த தமிழ்நாட்டு முஸ்லிம்கள்!: சிறுமிகள், பெண்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கினர்...
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழ்நாட்டின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் ஷியா முஸ்லிம்களும், அலி கமேனியின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயது வந்தோர் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.