மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது – பெண் கவலைக்கிடம்

SaiSai
மே 24, 2026 - 23:43
 0  25
மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது – பெண் கவலைக்கிடம்

 மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது – பெண் கவலைக்கிடம்

மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்த – அங்கொட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த 18ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து தனது மனைவியின் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தாக்குதலை மேற்கொண்டது அவரது சட்டப்பூர்வ கணவரே என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் போத்தலும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், தீ வைத்தது தனது மனைவிக்கே என சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் தங்களது முந்தைய திருமணங்களிலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, மனைவி பல்வேறு நபர்களுடன் பழகியதாகவும், அடிக்கடி வீட்டிற்கு வராமல் இருந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ வைத்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சந்தேகநபர் கூறியிருந்தமை தொடர்பிலும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்சாட்டுகளிலும் தொடர்புடையவர் அல்ல என்றும், முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றியவர் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow