பண்டாரவளையில் சூதாட்ட மையம் முற்றுகை.
பண்டாரவளை காய்கறி மொத்த விற்பனை மையத்தில் சூதாட்டம் முற்றுகை
பண்டாரவளை காய்கறி மொத்த விற்பனை மையத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படும் சூதாட்ட நடவடிக்கை இன்று (23) அதிகாலை பண்டாரவளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
What's Your Reaction?



