மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை!

SaiSai
மே 23, 2026 - 21:31
 0  20
மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை!

 மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை!

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், உணவுப் பொதிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை அமுலில் உள்ளது.

 அரசியல், மத, சமூக நிகழ்வுகளின் அலங்காரங்களிலும் பொலித்தீன் பயன்பாடு தடை.

 மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடல்நலத்துக்கும், விலங்குகளின் உயிர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரிக்கை.

 வரவிருக்கும் வெசாக் பண்டிகை மற்றும் தன்சல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#BreakingNews #PlasticBan #SriLanka #Environment #Vesak2026 #INews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow