டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது

SaiSai
மே 23, 2026 - 20:37
மே 23, 2026 - 20:39
 0  101
டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது

டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவ – பெற்றோசோ பகுதியில் கைது!

டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற அதிர்ச்சி இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்து இருந்த நிலையில் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி வயோதிப தம்பதியினர் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (23) மாலை சுமார் 4.30 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவத்திற்கு உதவி மற்றும் தங்குமிடம் வழங்கியதாக கூறப்படும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#BreakingNews #Dikoya #Hatton #Bogawantalawa #CrimeNews #INews #SriLankaNews

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow