தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்று (22) தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ருவன்வெல்ல பகுதியில் உள்ள 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் உள்ள மேலும் 3 பாடசாலைகளும் மூடப்பட்டு, மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை வழக்கம்போல் நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர, மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை – அவிசாவளை பிரதான வீதி, தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What's Your Reaction?



