புட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொன்ற மனைவி !

SaiSai
Dec 15, 2025 - 20:28
 0  17
புட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொன்ற மனைவி !

காலை உணவாக புட்டு, தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். 

இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார் இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாறிவிட்டது. இந்நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்துள்ளார். 

கனகராசா சரவணன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow