காவத்தை நீலகமாம் தோட்டத்தில் வீடு உடைப்பு: பிரதி அமைச்சரின் துரித நடவடிக்கையால் 9 பேர் கைது

SaiSai
Apr 22, 2026 - 21:18
 0  12
காவத்தை நீலகமாம் தோட்டத்தில்  வீடு உடைப்பு:   பிரதி அமைச்சரின் துரித நடவடிக்கையால் 9 பேர் கைது

காவத்தை, நீலகமாம் தோட்டப் பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கறுப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபரை தொடர்புகொண்டு உரையாடியதனை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow