யாழ்ப்பாணத்தில் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாயார் உயிரிழப்பு !! கோயில் சென்றவேளையில் நடந்த கொடூரம் !
யாழ்ப்பாணத்தில் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாயார் உயிரிழப்பு !!
கோயில் சென்றவேளையில் நடந்த கொடூரம் !
யாழ்ப்பாணத்தில் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார், கழிவகற்றும் வாகனம் மோதி மகளின் கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூளாய் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய எஸ். வரதராணி என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகரிலுள்ள ஆலயம் ஒன்றில் நடைபெறவுள்ள பூஜையில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அர்ச்சனைப் பொருட்களுடன் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களுக்கு எதிரே வந்த கழிவகற்றும் வாகனம் (கலி பவுசர்) ஒன்றை முந்திக்கொண்டு வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதனால் நிலைகுலைந்த இருவரும் வீதியில் விழுந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மகள் வீதியின் ஒரு பக்கமாக விழ, பின்னால் அமர்ந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மகள் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார், கழிவகற்றும் வாகனத்தின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



