சிவனொளிபாத மலை தரிசனத்திற்கு வந்தவர் திடீர் மரணம்!
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்தவர் மரணம்.
இச் சம்பவம் இன்று காலை 11.30 க்கு இடம் பெற்று உள்ளது.
தெஹிவளை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த சம்பத் பெர்னாந்து வயது 39 என்பவர் இன்று காலை சிவனடி பாத மலைக்கு செல்லும் வழியில் உள்ள கங்குல தென்ன பகுதியில் வைத்து திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன காவல் துறையினர் ஊடக நல்லதண்ணி நகருக்கு தூக்கி வரப் பட்டு அங்கு இருந்து நோயாளிகள் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க முன் அவர் மரணம் அடைந்து உள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அவரது உடலம் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள சவ கிடங்கில் வைக்க பட்டு உள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



