நாட்டில் பால்மா, கோதுமை மாவு விலை உயர்வு இல்லை

SaiSai
Mar 23, 2026 - 19:16
 0  31
நாட்டில் பால்மா, கோதுமை மாவு விலை உயர்வு இல்லை

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்க திட்டமில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்டது.

அந்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் விலைகளை நிலைநிறுத்த உறுதி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow