அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – இலங்கை மாணவர்கள் பாதிப்பு

SaiSai
மே 7, 2026 - 12:10
 0  19
அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – இலங்கை மாணவர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான விசா அனுமதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய தகவல்களின் படி, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர் விசா நிராகரிப்பு வீதம் 32.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வீதமாகும். 2025 ஆம் ஆண்டில் இது 15.5% ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 38% பேரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மட்டும் 34,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு (கொவிட் காலத்தை தவிர்த்து) பதிவான குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்நிலையில், வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் குறையும் சூழ்நிலையில் இலங்கையின் உள்ளூர் பல்கலைக்கழக அனுமதி நடவடிக்கைகள் குறித்தும் அரசு விளக்கம் வழங்கியுள்ளது. 2025 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இம்முறை 1,76,527 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், செப்டம்பர் முதல் வாரத்தில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டுப்புள்ளிகள் வெளியான பின்னர் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது ஆரம்பத் திகதிகளை நிர்ணயிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow