35 ரூபாய் பொலிஸ் நிதி மோசடி பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
பொலிஸ் நிதியிலிருந்து 35 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக குற்றச்சாட்டு!
பொலிஸ்காரர் ஒருவர் கைது..!
பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் பணத்திற்குப் பொறுப்பாக கடமையாற்றியிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 35 இலட்சத்து 40 ஆயிரத்து 415 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையிலும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்குவின் ஆலோசனையிலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் ஆரியவன்ச தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?



