கொழும்பில் துப்பாக்கி சூடு -16வயது மானைவி படுகாயம்!

SaiSai
Dec 31, 2025 - 10:18
 0  19
கொழும்பில் துப்பாக்கி சூடு -16வயது மானைவி படுகாயம்!

கொஹுவல துப்பாக்கிச் சூடு: 16 வயது மாணவி படுகாயம்

கொஹுவல, சரணங்கர வீதியில் உள்ள போதியவத்த பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலானது இலக்கு தவறி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டையே சந்தேகநபர்கள் இலக்கு வைத்திருக்கலாம் என விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.

காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய உடல்நிலை குறித்த விபரங்களை வைத்தியசாலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow