கொழும்பு மாநகர சபையில் ஊழல்!

SaiSai
Dec 31, 2025 - 10:54
 0  15
கொழும்பு மாநகர சபையில் ஊழல்!

கொழும்பு மாநகர சபையில் 2010 தொடக்கம் 2025 க்கு இடையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

 

2025 டிசம்பர் 30ஆம் திகதியன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், கொழும்பு மாநகர சபையில் ஊழல் மற்றும் மோசடிச் செயல்கள் தொடர்பாக பல புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அரசுக்கு சொத்து மற்றும் வருவாய் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபை அதன் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடையத் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

எனவே, குறித்த முறைப்பாடுகள் , குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களை விசாரித்து ஆய்வு செய்வது அவற்றின் உண்மையைத் தீர்மானிக்கவும், பொறுப்பானவர்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதும் அவசியம் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 அதன்படி, குறித்த தவறுகளை விசாரித்து, ஆய்வு செய்து, அறிக்கையளித்து, தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow