பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவிப்பு

SaiSai
Jun 22, 2026 - 15:31
 0  23
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று (22) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "நான் பதவி விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் ஜூலை 9 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்னர் புதிய தலைவர் பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த ஸ்டார்மர், கட்சிக்குள் அதிகரித்த அழுத்தம் மற்றும் அண்மைய அரசியல் பின்னடைவுகளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow