ஸ்டொக்கம் தோட்ட போராட்டத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
ஸ்டொக்ஹொம் தோட்ட போராட்டத்துக்கு எதிராக பொலீஸில் முறைப்பாடு
இயற்கை அனர்த்த எச்சரிக்கையின்பேரில் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களாக பாடசாலைக் கடட்டத்தில் தங்கவைக்கப்ப்டடுள்ள நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சாமிமலை - ஸடொக்ஹோம் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வாரம் தமக்கு பாதுகாப்பான வீடமைப்பு காணிகளை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
எந்த விதமான வன்முறைகளும் இல்லாது நியாயமான கோரிக்கைகளும் சாத்வீக போராட்டமாக இலங்கையின் தேசிய கவனத்தைப் பெற்ற இந்தப் போராட்டத்தை முடக்கும் வகையில் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஐவருக்கு ( 5) எதிராக தோட்ட நிர்வாகத்தால் பொலீஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டு க்கு அமைய நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு ஐவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டிலேயே தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் பேரில் வீடமைப்புக்கான காணி ஒதுக்கப்பட்ட நிலையில் அதனை மக்களுக்கு பிரித்து வழங்காது தேயிலைக் கன்று நாற்று மேடை யாக பயன்படுத்திக் கொண்டுள்ள தோட்ட நிர்வாகம் தமது தவறை மூடி மறைப்பதற்காக தற்போது இந்தப் போராட்டத்தைத் திசை திருப்ப முனைகின்றது.
தாம் தமக்காக ஒதுக்கப்பட்ட காணிகளைக் கோரி அரசாங்கத்திடமே சாத்வீகமான கவனயீர்ப்பு போராட்த்தை நடாத்தியதாகவும் எந்த விதத்திலும் தோட்ட நிர்வாகத்துக்ககு எதிராக தமது போராட்டம் அமையவில்லை. அதே நேரம் தமக்கு ஒதுக்கப்பட்ட காணியில் பலாத்காரமாக கைப்பற்றவும் முனையவில்லை. இந்த நிலையில் பொலீஸ் முறைபபாட்டில் பலவந்தமாக காணியை கைப்பற்ற முனைவதாக ஐந்து பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலீஸ் விசாரணைகளுக்கு அழைப்பது அச்சமூட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது
. இத்தகைய அச்சுறுத்தலகளுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் தமக்கு ஒதுக்கப்பட்ட காணியை தமது தேவைக்கு பயன்படுத்துவதில் இருந்து தோட்ட நியாவாகமே தவறு இழைத்துள்ளதாகவும் போராட்டத் தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்படடுள்து.
சுரேஷ்குமார்
What's Your Reaction?



