றமழான் கால பேரீச்சம்பழ இறக்குமதிக்கு அரசாங்கம் வரிச்சலுகை

SaiSai
Dec 31, 2025 - 14:29
 0  9
றமழான் கால பேரீச்சம்பழ இறக்குமதிக்கு அரசாங்கம் வரிச்சலுகை

எதிர்வரும் றமழான் நோன்புக் காலத்தை முன்னிட்டு, இலவச விநியோகத்திற்காக நன்கொடையாகவும் அன்பளிப்பாகவும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இஸ்லாமியர்களால் றமழான் நோன்புக் காலத்தில் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழம், ஒவ்வொரு ஆண்டும் இராஜதந்திர ரீதியிலும், சமூக மற்றும் மத அமைப்புகள் ஊடாகவும், தனிநபர்களாலும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பேரீச்சம்பழங்கள், வெளிநாட்டு செலாவணி செலவினமின்றி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் றமழான் நோன்புக் காலம் 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பித்து, 2026 மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு, றமழான் காலத்தில் நன்கொடையாகவும் அன்பளிப்பாகவும் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரி விலக்கு அல்லது வரிச்சலுகை வழங்குவது தொடர்பான யோசனையை, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow