கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுற்றுலாத் துறை மூலமான வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால அறிக்கையின்படி தெரியவருகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா வருமானம் மொத்தம் 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியாகும் என அந்த அறிக்கையின்படி தெளிவாகிறது.
What's Your Reaction?



