காரியாலய காவலாளியின் விபரீத முடிவு!

SaiSai
Jul 12, 2026 - 10:42
 0  28
காரியாலய காவலாளியின் விபரீத முடிவு!

காரியாலய காவலாளி ஒருவர் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை.

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிராம்பு தோட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம் பெற்று உள்ளது.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவிக்கையில் 38 வயது உடைய திருமணமான ஒரு குழந்தையின் தந்தை மண விரக்தி காரணமாக தனக்கு தானே தூக்கிட்டு கொண்ட நிலையில் காப்பாற்ற படும் நோக்கில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்ட நிலையில் மரணித்து உள்ளார் எனவும் உடலம் உடற் கூற்று பரிசோதனை செய்ய டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow