அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் பூரண அனுசரணையில், முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ அவர்களின் தலைமையில் நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (22.02.2026) மாலை 2.00 மணிக்கு கொட்டகலை நகர் ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
கொட்டகலை பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்நிகழ்வில் நிவாரண பொதிகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை நகர் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான கௌரவ. விஸ்வநாதன் புஸ்பா அவர்கள், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள், நகர வர்த்தகர்கள், நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்கள், பயனாளிகள் ஹட்டன் பிரதேச அதிபர் ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.