உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி குற்ற செயல்கள்

SaiSai
Jan 15, 2026 - 20:05
 0  20
உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி குற்ற செயல்கள்

உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் அட்டைகளை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெறுவதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திராயன தெரிவித்துள்ளார்.

தொலைபேசி நிறுவனங்கள் முறையாக அடையாளங்களை உறுதிப்படுத்தாமல் சிம் அட்டைகளை வழங்குவது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக உள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சிறையில் கடத்தல்காரர்களுடன் தங்குவதால், சிறைச்சாலைகள் குற்றவாளிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறிவருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகக் கருதி அவர்களைச் சுயவிருப்பின் பேரில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் மனநிலை சமூகத்தில் உருவாக வேண்டும். உயிரிழந்தவர்களின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாறப்படுவதையும், வங்கி சட்டங்களால் அவற்றை விரைவாகக் கண்காணிக்க முடியாமல் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow