கழிவு வரிக்கு எதிராக பொகவந்தலாவ நகரில் போராட்டம்!
கழிவு வரிக்கு எதிராக பொகவந்தலாவையில் போராட்டம்!
பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நோர்வூட் பிரதேச சபை வரி (மாதாந்தம் 200 ரூபா கழிவு வரி) அறவிடுதாகத் தெரிவித்து - அதற்கு எதிர்ப்பு பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவ வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவ பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்திவரை சென்று மீண்டும் பேரணியாக மீண்டும் பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலயம் முன்பாக பேரணி வந்தடைந்தது.
பொகவந்தலாவ நகரப் பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேச சபை சேகரிப்பதற்கு வரியைக் கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, நகரப் பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் , நாம் பெறும் தண்ணீருக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நாங்கள் வருடா வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்..
“
What's Your Reaction?



