180 அலகுகளை தாண்டினால் 18% மின்கட்டண உயர்வு..!

SaiSai
மே 9, 2026 - 21:04
 0  27
180 அலகுகளை தாண்டினால் 18% மின்கட்டண உயர்வு..!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்கட்டண திருத்தத்தின் கீழ், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 18 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதேவேளை, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோரின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்தமை, இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படவுள்ளமை உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த கட்டண உயர்வு நாட்டின் சுமார் 5 சதவீத மின் நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow