ஶ்ரீமணி அறக்கட்டளையின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு– கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு!
ஶ்ரீ மணி அறக்கட்டளையின் முதலாவது ஆண்டு பூர்த்தி விழா – கற்றல் உபகரணங்கள் வழங்கல்
ஶ்ரீ மணி அறக்கட்டளையின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பதுளை மாவட்டம் ஹொப்டன் கெஹெல்வத்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிவாசகர் அறநெறி பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (28.12.2025) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, அறக்கட்டளையின் தலைவர் திரு. மணி பிரதீப்ராஜ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன், திருமதி ரவிச்சந்திரன் மேகலா அவர்களின் அனுசரணையிலும், இணைப்பாளர் திரு. ஸ்ரீ தரன் அவர்களின் வழிகாட்டலிலும், அமைப்பாளர் திரு. விஜயகுமார் அவர்களின் ஏற்பாட்டிலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆதி யோகி யோகாரண்யம் அமைப்பின் உறுப்பினர்கள், அறநெறி துறை சார்ந்த பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், மாணவர்களின் மன மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் யோகாசனம், தியானப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வு சமூகப் பொறுப்புணர்வையும் கல்வி மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
What's Your Reaction?



