வீதி விளக்குகளுக்கான செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க யோசனை

SaiSai
Jan 7, 2026 - 14:09
 0  20
வீதி விளக்குகளுக்கான செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க யோசனை

மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளுக்கான மின்சாரச் செலவை, அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைத்து அறவிட அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளின் மின்சார பயன்பாடு (வாட் அளவு) கணக்கிடப்பட்டு, அந்தச் செலவு அப்பிரதேச மக்களிடையே பகிர்ந்து அவர்களது மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த கூடுதல் கட்டணம், மொத்த மின்சாரக் கட்டணத்தின் 2.2% ஐ மீறக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வீதி விளக்குகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களான பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளிடம் உள்ள நிலையில், புதிய யோசனையின் மூலம் அந்த அதிகாரத்தை நீக்கி, தனியான நிறுவனமொன்றின் கீழ் நிர்வகிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow