கைதியின் பணத்தில் சொகுசு வாழ்க்கை – சிக்கிய பொலிஸ் அதிகாரி
ஹெரோயின் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக பெற்ற குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில் தெரியவந்ததாவது, சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த வங்கி அட்டையில் இருந்த பணத்தை பயன்படுத்தி ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மேலும், இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மேற்பார்வையில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?



