வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

SaiSai
மே 6, 2026 - 17:59
 0  18
வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரதிவாதிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை வழங்கியது.

அதேவேளை, இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பில் ஏழு பிரதிவாதிகளையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்து மரண தண்டனை விதித்திருந்தது.

2015 ஆம் ஆண்டு மே மாதம், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow